ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் இன்று (28.03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக்கி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலஅடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.