பாடசாலை இடைநிலைகளில் மாணவர்களை இணைக்க புதிய நடைமுறை

பாடசாலைகளில் இடைநிலையில் மாணவர்களை கல்வி அமைச்சின் கடிதத்துடன் இணைக்கும் நடைமுறை நீக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். இது தொடர்பிலான அறிவித்தல் தமிழ், சிங்கள புதுவருடதின் பின்னர் சுற்று நிரூபம் மூலமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பாடசாலைகளுக்கு விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும், அந்த விண்ணப்பத்துக்கு அமைவாக பாடசாலைகள் புள்ளிகளை வழங்கி அமைச்சுக்கு அவற்றை அனுப்பி அதன் மூலமாக மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இருக்கின்ற போதும் அமைச்சின் கடிதம் வழங்கப்பட்டால் பாடசாலையில் மாணவர் இணைக்கப்படும் செயல் முறை காணப்படுகிறது. அது நிறுத்தப்படவுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் கீழ் பெற்றோர் அமைச்சுக்கு வருகை தந்து அலைக்கழிவது நிறுத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாடசாலை இடைநிலைகளில் மாணவர்களை இணைக்க புதிய நடைமுறை

Social Share

Leave a Reply