காப்புறுதி நிறுவனமொன்றில் பணி் புரியும் மூன்று பெண் ஊழியர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில், புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த காப்புறுதி நிறுவனமொன்றின் பொது முகாமையாளர் மற்றும் பணியாளர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் செயலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.