நாளை (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் 20 ரூபாவினால் குறைக்கப்படும் என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்தை கருத்திற் கொண்டு இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
இதன்படி முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் முதல் கிலோமீட்டருக்கு 120 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 80 ரூபாவும் அரவிடப்பட்டது.