பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாப்பரசருக்கு சுவாசத்தொகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில தினங்களாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாகவும் வத்திகானிலிருந்து வெளியான அறிக்கை தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் பாப்பரசருக்கு கொவிட் தொற்று இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சில நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து முறையான சிகிச்சைகளை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் குருத்தோலை ஞாயிறு தினத்திலிருந்து பரிசுத்த வாரம், உயிர்த்த ஞாயிறு வரை திருப்பலிகள் மற்றும் வழிபாடுகளை பாப்பரசர் தலைமை தாங்கி ஒப்புக்கொடுப்பதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஏப்ரல் மாத இறுதியில் பாப்பரசர் பிரான்சிஸ் ஹங்கேரிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version