வென்னப்புவ பெரகஸ் சந்தியில் வைத்து நேற்று(29.03) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, சந்தேக நபர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர். அவர்களைத்துரத்திச் சென்று கைது செய்ய முயன்ற போது, சந்தேக நபர்களிலொருவர் பொலிசாரைக் கத்தியால் தாக்கியமையாலேயே, தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடனிருந்த 30 வயதுடைய மற்றைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
