மிரிஹான பிரதேசத்தில் பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையிலுள்ள தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை நினைவுகூரும் வகையில் குழுக்கள் செயற்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக இராணுவப் பாதுகாப்புப் பிரிவினரையும் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.