பண மோசடி ஈடுபட்ட சீனப் பிரஜைகள் சிக்கினர்.

இணையத்தளம் மூலம் பண மோசடி ஈடுபட்டமை தொடர்பில் சீனப் பிரஜைகள் சிலர் இன்று (01.04) அளுத்கமை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை, களுவாமோதர பிரதேசத்தில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த சீனப் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளிடம் இருந்த கணனிகள், பெறுமதிமிக்க கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள், இந்த சுற்றுலா விடுதியில் சில மாதங்களாகவே தங்கியிருப்பதாகவும், இதுவரையில் பல்வேறு நாடுகளில் உள்ள நபர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version