எரிவாயுவின் விலைகள் குறையும் பட்சத்தில் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் எரிவாயு மற்றும் விறகுகளை பயன்படுத்தி தமது உற்பத்தியை மேற்கொண்டு வருவதாகவும், சமையல் எரிவாயுவின் விலை குறைப்பை கருத்திற் கொண்டு தமது சங்கம் ஒன்று கூடி பேக்கரி உணவு பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.