இன்று (04.04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பின் படி, இதன் புதிய விலை ரூ.3,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.516 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ.1596 என அறிவிக்கப்பட்டுள்ளது.