சுகயீன விடுமுறையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள்!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06.04) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி சம்மேளனம் மற்றும் அலுவலக அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சமுர்த்தி ஊழியர்களின் அமைப்பு மற்றும் கொடுப்பனவு பிரச்சினையை அடிப்படையாக கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என். ஏ.எம். ஐ. பி அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல சங்கங்களும் தமது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான வேலைநிறுத்தங்களை நடைமுறைப்படுத்துவது நியாயமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version