9 வளைவுகள் கொண்ட தெமோதர பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கலாசார நிதியத்துடன் இணைந்து தெமோதர பாலத்தை பாதுகாக்கவும், சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.