பயணச்சீட்டுக்கு பதிலாக QR குறியீடு!

ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கான பயணச்சீட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திக்குள் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்த டிப்போக்களுக்கு பஸ் கட்டங்களின் மொத்த தொகையை முழுமையாக வழங்குவதில்லை எனவும் இது சில புகையிரதங்களிலும் இடம்பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக புதிய QR முறைமையின் ஊடாக தனக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version