மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (10.04) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சில இடங்களில் 50 மி.மீ மேல் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், சூரியன் ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும் எனவும் இன்று ஆனமடுவ, தம்புள்ளை, பெல்லனேவல மற்றும் கல்குடா பகுதிகளுக்கு இன்று மதியம் 12:11 மணி அளவில் உச்சம் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.