புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சமூக ஊடகங்களில், தங்களின் பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக பயணங்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவற்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தமது இருப்பிடம் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு, இன்று (10.04) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான தகவல்கள் கொள்ளை சம்பவங்களுக்கும், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு இந்தத் தகவல்கள் பெரிதும் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடுகளை விட்டு வெளியே பயணிப்பவர்கள் CCTV கமராக்களை செயற்படுத்துமாறும், திருட்டுக்களை தடுக்கும் வகையில் காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.