மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (12.04) மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 15ம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேலே காணப்படும் எனவும், மாங்குளம், பெரியகுளம், குறட்டிய, மொறவெவ, மஹதிவுல்வெவ ஆகிய பகுதிகளுக்கு நண்பகல் 12:11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.