இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் கடன் மீளமைப்பு கூட்டம்.

இலங்கையுடனான. கடன் மீள் செலுத்துகை திட்டம் தொடர்பில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நாளைய தினம்(13.04) அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நிதியமைச்சை மேற்கோள் காட்டி, சர்வதேச நாணய நிதியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வொசிங்டனில் நடைபெறும் குளிர்கால சர்வதேச கூட்டத்தின் போது, ஜப்பான், பிரான்ஸ், இந்திய நிதியமைச்சர்களான சுனிச்சி சுஸுகி, ப்ரூனு லீ மரியா, நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து அறிவித்தலை வெளியிடவுள்ளனர்.

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள மூன்று நாடுகளும், இணைந்த கடன் மீள் செலுத்துகை திட்டம் ஒன்றை தயார் செய்துள்ளனர். அதனைஏ அறிவிக்கவுள்ள நிலையில் குறித்த சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி இராஜங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோர் இணைய வழியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய பிரதிநிதிகள், உலக வங்கி பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியம், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை நான்கு வருடங்களுக்குள் மீள செலுத்தும் வகையில் இலங்கைக்கு வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வருட முற்பகுதியில் பெறப்பட்ட இந்தியாவின் 3 பில்லியன் கடனுதவி திட்டத்தின் முதற் கட்டம் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீள் செலுத்துகை மற்றும் இதர கடன் வழங்கும் நாடுகளின் மீள் செலுத்துகை மற்றும் புதிய கடன் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்த கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் கடன் மீளமைப்பு கூட்டம்.

Social Share

Leave a Reply