மலர்ந்திருக்கும் இந்த தமிழ், சிங்கள புதுவருடம் அனைவருக்கும் மன மகிழ்ச்சியும், நிம்மதியும், ஏற்றம் நிறைந்த ஆண்டாக அமைய வி மீடியா வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
கடந்தவை கடந்தவையாக போகட்டும். அவற்றை அனுபவங்களாக, பாடங்களாக எடுத்துக் கொண்டு இந்த வருடத்தில் முன்னோக்கி நகர்வோம்.
இந்த வருடம் இலங்கையில் விலை வாசி ஓரளவு குறைந்து, தட்டுப்பாடுகளற்று ஒரு நாடாக நிம்மதியாக இந்த வருடத்தை கொண்டாட ஒரு சூழல் அமைந்துள்ளது. இதனை தொடர, மேம்படுத்த அனைவரும் இணைந்து உழைப்பதே ஒரே வழி.
எமக்கான பொறுப்புகளில் நாம் நேர்மையாக செயற்பட்டால் உலகம் தானாக திருந்தும். வீதி விபத்துக்கள் இலங்கையில் அதிகரித்துள்ள நிலையில், வீணான இழப்புகளை தவிர்க்க இந்த வருடத்தில் உறுதி பூணுவோம்.
அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.
விபத்துக்களை குறைப்போம்.