இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் ஆழத்தில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு அருகில் உள்ள துபன் கடல் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.