இந்தியாவின் முன்னாள் தாதா MP உம், சகோதரனும் பொது வெளியில் சுட்டுக் கொலை.

இந்தியா, உத்தர பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்த ஆதிக் அஹமட் மற்றும் அவரது சகோதரா் அஸ்ரஃப் ஆகியோா் நேற்று(15.04) செய்தியாளகர் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கும் போது கமரா பதிவுகள் இடம்பெறும்போது மூவரினால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த சம்பவதுடன் தொடா்புடைய சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சமாஜவாதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆதிக் அஹமட்ட்டின் மகன் ஆசாத் உட்பட இருவா், காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்ற வாசகத்தை சத்தமாக கத்தியதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-இல் முன்னாள் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஆதிக் அகட் மற்றும் அஸ்ரப் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனா். அப்போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டியளித்த வேளையில் ஊடகவியலாளா்கள் போல் நின்றிருந்த இருவா், துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடாத்தியவர்கள் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் குடும்பத்தாருடன் உறவுகளை பேணவில்லை எனவும் இந்திய ஊடகமொன்று செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் தாதா MP உம், சகோதரனும் பொது வெளியில் சுட்டுக் கொலை.

Social Share

Leave a Reply