அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களைத் தேடி நடத்தப்படும் சோதனை நிறுத்தப்படவில்லை என்றும், புதுவருட காலத்திற்கு பின்னரும் தொடரும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதுவரையில், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 700க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டை கையிருப்புகளை அரசு கட்டுப்பாட்டு விலைக்கே விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.