அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடே பாயும் கொத்மலை ஓயாவில் வாழும் மீன்கள் நேற்று (16.04) திடீரென உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்த்தேக்கத்தில் இருந்து அம்பேவெல முதல் மெராயா, அல்ஜின் அகரகந்த வரையான சுமார் 12 கிலோமீற்றர் வரை இவ்வாறு மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கொத்மலை ஓயாவில் மீன்கள் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் லிந்துலை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.