இளைஞர்கள் மத்தியில் ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்த தீர்மானம்!

இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் மற்றும் ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு 70,000 ஆடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஆடு வளர்ப்பு பாரியளவில் நடைபெறாததால், ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுப்பால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆட்டின் தோல் மற்றும் ஆட்டு உரம் மூலமும் அதிக வருமானம் பெற முடியும் என தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு உயர்தர ஆடுகள் மற்றும் ஆடு வளர்ப்புக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் ஆடு வளர்ப்பு தொடர்பான பொருட்களை வாங்குவதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதிக்குள் 70,000 ஆடுகள் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், 2024 ஆம் ஆண்டில் இத்தொகையை மேலும் அதிகரிப்பதே இலக்கு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்திற்கு இடமளிக்கும் சில மாவட்டங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த விவசாய அமைச்சர், தனியார் துறையினரின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version