இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சுயசரிதை திரைப்படமான “800” இன் முதற் பார்வை முரளியின் 51 வது பிறந்த தினமான இன்று(17.04) வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பல சர்ச்சைகளுக்குள்ளான இந்த திரைப்படம் தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்து திரையிடலுக்கு தயாராகி வருகிறது. இந்த வருடத்துக்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, கொச்சின், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஸ்லம்டோக் மில்லியனயர் திரைப்படத்தில் நடித்த மதூர் மிட்டால் இந்த திரைபபடத்தில் முரளியாக நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. அவரோடு நரேன், நாஸர், ரித்விகா, ஹரி கிருஷ்ணன் என பல நடிகர்களோடு, இலங்கை நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
