சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணைகளுக்கிடையில் நடைபெற்ற IPL தொடரின் விறு விறுப்பான போட்டியில் சென்னை அணி 08 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுக் கொண்டது.
டெவோன் கொன்வேயின் சிறந்த ஆரம்பம் மூலம் 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது சென்னை அணி. கொன்வே 83(45) ஓட்டங்களையும், ஷிவம் டுபே 52(27) ஓட்டங்களையும் பெற்றனர். 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக இருவரும் பகிர்ந்தனர். அஜிங்கையா ரெஹானே 37(20) ஓட்டங்களை பெற்று கொன்வேயுடன் 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தார். ஹெய்க்வூட் வேகமா ஆட்டத்தமிழந்த போதும் ஆரம்பம் மிகவும் சிறப்பாக அமைய வலுவான ஒட்ட எண்ணிக்கையை பெற உதவியது. பந்துவீச்சில் பந்துவீசிய ஆறுபேரும் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய பெங்களுர் அணி கோலி அடங்கலாக வேகமாக இரன்டு விக்கெட்களை இழந்த போதும் பப் டு பிளேஸிஸ் மக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை அண்மிக்க முடிந்தது. இருவரும் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். மக்ஸ்வெல் 76(36) ஓட்டங்களையும், பிளேஸிஸ் 62(33) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீதில் துஷார் தேசபந்தே 03 விக்கெட்களையும், மஹேஷ பத்திரன 02 விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷண, ஆகாஷ் சிங், மொயீன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.
சென்னை அணி விளையாடிய 05 போட்டிகளில் பெற்ற மூன்றாவது வெற்றியின் மூலம் 06 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. RCB அணி 05 போட்டிகளில் 02 வெற்றிகளைப் பெற்று 04 புள்ளிகளோடு நான்காமிடத்தில் காணப்படுகிறது.
