அத்தியாவசிய பொருட்களான பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைக்கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்திய நிலையில் விலைகள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. இறக்குமதியாளர்களும், நிறுவனங்களும் தங்களுக்கு நட்டம் ஏற்படாதபடி விலைகளை ஏற்றியுள்ளனர் அல்லது ஏற்றவுள்ளனர்.
இந்த அடிப்படை பொருட்களின் விலையேற்றங்கள் காரணமாக இந்த பொருடக்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளன. அதன்படி தேநீர் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிக்கவுள்ளன.
உணவு மற்றும் உணவு தயாரிப்பு பொருட்கள் அனைத்துமே இதன் காரணமாக விலை அதிகரிப்பு செய்யப்படும். ஆகவே சாதாரண மக்கள் இந்த விலையேற்றத்தின் காரணமாக பாதிக்கப்படவுள்ளனர்.
பால்மாவின் விலை 1 கிலோ கிராம் 250 ரூபாவினால் அதிகரிப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் சந்தையில் பால்மா கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும் விலை அதிகரிப்புக்கான சாத்தியம் காணப்படுவதாக எதிர்பார்பார்க்கப்படுகிறது. பால்மாவினை பாவிக்கமால் பசுப்பாலை பாவித்தார்களும் பால் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் 750 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலையேற்றம் பல அடிப்படை தேவைகளுக்கான பொருட்களின் விலையேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கோதுமை மா 1 கிலோகிராம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.
