அம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் அவசர நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்!

அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கும் நிபுணர்கள் இல்லாததால் அவசர அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை நான்கு பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றி அனுப்ப அம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஏ. எம்.டபிள்யூ.எஸ். பண்டார தீர்மானித்துள்ளார்.

இதன்படி, இங்குள்ள நோயாளர்கள் கராப்பிட்டிய, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் 4 வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு, அம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், மயக்க மருந்து நிபுணர்கள் இல்லாத காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளை அனுப்புவதை தவிர்க்குமாறு எண்ணிய பிரதான வைத்தியசாலைகளில் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வைத்தியர் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply