இன்று (20.04) முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வெள்ளை முட்டை ஒன்று 44 ரூபாவிற்கும் சிவப்பு முட்டை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 கிலோ வெள்ளை முட்டை 880 ரூபாவிற்கும் 1 கிலோ சிவப்பு முட்டை 920 ரூபாவிற்கும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.