2019 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்தமை தொடர்பில் ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் இன்று(20.04) மேன்முறையீட்டை எடுத்துக் கொள்வதில்லை என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பினை வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டிருந்தது.
ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு வழங்கப்பட வேண்டிய காட்டாயமில்லை எனவும், வழக்கு விசாரணைகள் உரிய முரையில் நேர்மையாக இடம்பெறவில்லை எனவும், ராகுல் காந்தி சார்பான வாதங்கள் முழுமையாக உள்வாங்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பை வழங்கியுள்ள போதும், வேறு வழிகள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் தாங்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கூறியுள்ளார்.
“ஏன் சகல திருடர்களும் மோடி எனும் முதற் பெயரை கொண்டுள்ளார்கள்” என இந்தியா லோக் சபா எனப்படும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதே இந்த பிரச்சினைகளின் மூல காரணமாகும்.
