வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதிகமான நீரை அருந்துவதன் மூலம் வெப்பமான காலநிலையினால் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளதுடன், அதிக வேப்பம் கொண்ட இந்நாட்களில் சரும நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறு குழந்தைகள் உட்பட அனைவரும் தினமும் இரு முறை குளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், சோர்வு, தூக்கம், உடல்வலி, மற்றும் வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் கூடுதலாக இருக்கும் பட்சத்தில், பழச்சாறுகள், தண்ணீர், ஜீவனி போன்றவற்றை அதிகம் அருந்துவது நன்மை தரும் எனவும், குறைந்தது 20 நிமிடங்கள் வரை குழந்தைகளை தண்ணீரில் இருக்க விடுமாறும் அவர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.