உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 4 வருடங்கள் கடந்தும் இதுவரை எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும், இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் வெளிக்கொணர முடியாதுபோயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும், அதனை மூடிமறைக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும், இதனால் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினரின் தலையீடு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன்,சுயாதீன விசாரணையின் மூலம்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் தரப்பினருக்கு தகுதி அந்தஸ்து பாராமல் தண்டிக்கப்படுவார்கள் எனவும்,சுயாதீன தேசிய மற்றும் சர்வதேச விசாரணையின் பிரகாரமமையும் இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட எவரையும் தப்பிக்க இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version