இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் வருடாந்த மர நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது!

ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 72 இலங்கை விளையாட்டு வீரர்களின் நினைவாக இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மர நடுகை நிகழ்வு இன்று (21.04) பொலன்னறுவை மாவட்ட சேவா முக்த முகாம் மற்றும் ஹிர ஹந்த கெடுவெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றியதன் மூலம் நமது நாட்டை உலகத்தின் முன் வெற்றிபெறச் செய்த வீரர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கான அனைத்து தாவரங்களையும் வழங்க வன பாதுகாப்புத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள், உலகின் மிக உயரிய மற்றும் சிறந்த விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டியில் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த தாம் செயற்பட்ட விதம், முயற்சிகள், சாதனைகள் மற்றும் தாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வானது பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதிலும், விளையாட்டை ஊக்குவிப்பதிலும் பெரும் பங்களிப்பாக அமைந்தது.

இந்நிகழ்வில், ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீனியானி குலவன்ச, சுகத் திலகரத்ன, நிம்மி டி சொய்சா, மகேஷ் பெரேரா, புஷ்பமாலி ராமநாயக்க, ருவினி அபேமான்ன, சிந்தன கிதல் விதானகே, பொலன்னறுவை விளையாட்டுப் பணிப்பாளர் சந்திம பொரோகம, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் வருடாந்த மர நடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version