வவுனியா மகாவித்தியன்ஸ் கிரிக்கெட், வலைப்பந்து போட்டி

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும், வலைப்பந்தாட்ட போட்டிகள் நாளை(22.04) பாடசலை மைதானத்தில் நடைபெறவுள்ளன.

மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற மகுட வாசகத்துடன் இந்த விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆண்களுக்கான கிரிக்கட் போட்டிகள் 05 ஓவர்களை உள்ளடக்கிய 06 பேர் விளையாடும் போட்டிகளாக நடைபெறுகின்றன.

பாடசாலை வகுப்பு பிரிவுகளின் படி அணிகள் போட்டிகளில் மோதவுள்ளன. போட்டிகளில் பங்கு பற்றும் அணிகளோடு அந்தந்த பிரிவு மாணவர்களையும், மற்றைய பழைய மாணவர்களையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம் அழைத்துள்ளது.

நிகழ்ச்சி நிரல்

தலைமை
திரு.K.ஹரிபிரசாத் – பழையமாணவர் சங்கம்
வ/ வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்

பிரதமவிருந்தினர்
திரு.A.லோகேஸ்வரன் – அதிபர்
வ/ வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்

நிகழ்ச்சி நிரல்

8.00 am – வித்திய விநாயகர் வழிபாடு
8.15. am – கொடியேற்றம்
8.17 am – பாடசாலைக் கீதம்
8.20. am – தலைவர் உரை
8.25 am – அதிபர் உரை
8.30 am -போட்டிகள் ஆரம்பம்
4.45 Pm – பரிசளிப்பு
5.00. Pm – நன்றியுரை

வவுனியா மகாவித்தியன்ஸ் கிரிக்கெட், வலைப்பந்து போட்டி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version