சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சன்ரைஸ் ஹைதராபாத் அணியுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 08 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தில் காணப்படும் ராஜஸ்தான் அணியும் 08 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 134 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அபிஷேக் ஷர்மா 34(26) ஓட்டங்களையும், ராகுல் திருப்பதி 21(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரன, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் டெவொன் கொன்வே 77(57)ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும், ருத்துராஜ் ஹெய்க்கவூட் 35(30) ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மயங் மார்க்கண்டே இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் சென்னை அணிக்கு தமது ஆதரவினை வழங்கினர். ஹைதராபாத் சன்ரைஸ் அணியும் தமிழக உரிமையாளரை கொண்ட அணியாகும்.
