பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அழைப்பு விடுத்த நபர் கைது!

அக்குரணையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தவறான தகவல்களை வழங்குவதற்காக அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தவறான தகவல்களை வழங்கிய சந்தேக நபரின் நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

அக்குரணையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொய்யான தகவலை வழங்கிய 21 வயதுடைய மௌலவி ஒருவர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸ் சைபர் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகள் மற்றும் அழைப்புப் பதிவுகளின் பகுப்பாய்வுக்குப் பின்னர், சந்தேகநபரின் இருப்பிடத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது எனவும், அதன் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு, அவசர சேவைப் பிரிவுக்கு வழங்கப்பட்ட பொய்யான தகவல்களின் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவசர எண்களுக்கு தவறாக அல்லது பகடிக்காக அழைப்புகளை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை ஏற்படுத்தும் எனவும், மேலும், உண்மையான அவசரநிலைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அதிகாரிகளை திசைதிருப்பும் செயலாக மாறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் சட்டப்படிகுற்றம் என்றும், இவற்றிற்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version