நானு ஓயா – ராகலை வரையான புகையிரத பாதை புதுப்பிக்கப்படும்!

நானுஓயாவிலிருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால ரயில் பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரதெல்ல குறுக்கு வீதியின் ஊடக கனரக வாகனங்கள் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்க கோரி ஒரு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்ததுடன், தற்போது அந்த வீதியில் விபத்துகள் பாரிய அளவில் குறைந்துள்ளதாகவும், இந்த வீதி தடை நன்மை பயக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும், அதுவரை நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version