சூடானில் உள்ள இலங்கையர்கள் தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறு கோரிக்கை!

சூடான் தலைநகர் கர்ட்டோம் மற்றும் அதன் அண்டைய பகுதிகளிலுள்ள இலங்கை மக்கள் தொடர்பில் தாம் கண்காணித்து வருவதாகவும், அவர்களோடு தொடர்பில் கெய்ரோவில் உள்ள சூடனுக்கான இலங்கை தூதுரகம் அறிவித்துள்து.

சூடானில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமான போர் நடைபெற்று வருகின்றது. தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பறியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் சூடானிலுள்ள இராஜதந்திரிகளை வான் வெளியூடாக பாதுகாப்பாக அவர்கள் நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக சூடானின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தூதரகத்துடன் தாம் தொடர்பில் உள்ளதாகவும், சூடானிலுள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் தங்கள் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கீழுள்ள வழிமுறைகளில் தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

slcairoconsular@gmail.com & telephone line – +201272813000.

Honorary Consul of Sri Lanka in Khartoum, Sayed Abdel, may be contacted on +249912394035.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version