திட்டமிட்டபடி மே மாதம் 29 ஆம் திகதி கல்வி பொதுத்தராதர பரீட்சசைகள் இடம்பெறுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(25.04) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளுக்கான முழுமையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இன்னமும் 10 தினங்களுக்குள் யாவும் நிறைவடையுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு தான் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். அவர்கள் தன்னோடு தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வருவதாகவும், அவர்களது கடிதத்துக்கு நேற்று முன் தினம் பதில் அனுப்பியதாகவும், அந்த பதிலை அவர்கள் நேர்தன்மையாக எடுத்துக் கொண்டு உரிய பிரச்சினையை தீர்த்து நேற்று 10 பாடங்களுக்குமான தலைமை அதிகாரிகள் தங்கள் பணிகளை ஆரம்பித்து விட்டதாதகவும் கூறினார்.
இந்த வருட பரீட்சசைக்கான பாடங்கள் நேர சூசியிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இந்த வருட சாதரண தர பரீட்சசைகளை நடாத்தாமல் சகல மாணவர்களையும் உயர்தம் கற்க வாய்ப்பு வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டு இவ்வாறு செய்ய வேண்டும் எனவும், கோரோனோ காலப்பகுதியில் லண்டன் O/L பரீட்ச்சையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக் காட்டினார். இதன் காரணமாக வழமையாக நடைபெறுவது போன்று உயர்தர பரீட்சசைகளை ஓகஸ்ட் மாதத்திலும், சாதரண தரப்பரீட்சசைகளை டிசம்பர் மாதத்தில் நடாத்த முடியுமெனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய கல்வி அமைச்சர் லண்டன் O/L முறைமையும், இலங்கை முறையுமையாக வித்தியாசமானது. பரீட்சசையின்றி உயர்தரத்துக்கு அனுப்பி வைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்றும் கல்வி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.