நீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் மீண்டும் ஒருமுறை மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக நீர்வழங்கல் சபைக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீரின் தேவை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.