தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!

தென் கொரிய வேலைகளுக்காக இந்த நாட்டிற்கு 6500 வேலை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனையும் தாண்டி இவ்வருடம் 8000 பணியாளர்கள் கொரிய வேலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அந்நாட்டு மனிதவள திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் லீ மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் நேற்று (26.04) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய மொழிப் புலமையில் தேர்ச்சி பெற்று தற்போது இணையதளத்தில் வேலை தேடும் மற்றும் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் காலாவதியாகும் உற்பத்தித் துறையில் வேலை தேடும் 600 விண்ணப்பதாரிகளை கப்பல் கட்டுமானத் துறையில் பணிக்கு பரிந்துரைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இணையதளத்தின் தொழில் பிரிவில் இருந்து, கப்பல் கட்டுமானப் பிரிவுக்கு பணிப் பிரிவை மாற்றி, இந்தப் பணிகள் இயக்கப்பட உள்ளதுடன், கப்பல் கட்டுமானத் துறையில் பணியிட மாறுதல் பெற விரும்புவோர் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் கொரிய மொழித் திறன் பரீட்சை தற்போதைய கணினி அடிப்படையிலான CBT முறைக்குப் பதிலாக UBT முறையைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்றும் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version