அயர்லாந்துக்கு எதிராக வெற்றியை நோக்கி இலங்கை

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், தமது இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் அயர்லாந்து அணி 02 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நாளை(28.02) போட்டியின் இறுதி நாள். இலங்கை அணி பெற்றுள்ள முன்னிலையை தாண்டி அயர்லாந்து வெற்றி பெறுவது சாத்தியமற்றது. இலங்கை அணி நாளை வேகமாக விக்கெட்களை கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. காலி மைதானம் இறுதி நாளில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதக தன்மையினை அதிகமாக வழங்கும். அதன் காரணமாக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.

இலங்கை அணி 03 விக்கெட் இழப்பிற்கு 704 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. காலி சர்வதேச மைதானத்தில் பெறப்பட்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரின் முதற் சதமும், இரட்டை சதமுமாகும். இலங்கை அணி சார்பாக முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய இரண்டாவது வீரராக தன் பெயரை பதிவு செய்துள்ளார். முதல் சதத்தை பெற்றதன் பின்னர் கூடுதலான ஓட்டங்களாக பெற்றவராக தன் பெயரை பதிவு செய்துள்ளார்.

குஷல் மென்டிஸ் அதிரடியாக அடித்தாடி 245 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 295 பந்துகளை எதிர்கொண்டு 11 சிக்சர்களையும் அடித்தார். திமுத் கருணாரட்ன 115(133) ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 228 ஓட்டங்கள். முதலாவது விக்கெட்டுக்காக 266 ஓட்டங்களும் பெறப்பட்டன.

அயர்லாந்து அணி தமது முதல் இன்னிங்சில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் கேர்ட்டிஸ் கம்பர் தனி கன்னிச்சதத்தை பெற்றுக் கொண்டார். அவர் 111 ஓட்டங்களை பெற்றார். போல் ஸ்டெர்லிங் 103 ஓட்டங்களை பெற்றார். இது அவருக்கு முதல் சதமாகும். அன்டி பல்பேர்னி தனது முதல் சதத்தை பெறும் வாய்ப்பை இழந்து 95 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். லோர்கான் ரக்ரர் 80 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார், விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply