லங்கா IOC எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று (01.05) முதல் அமுலுக்கு வரும் CEYPETCO எரிபொருள் விலைக்கு அமைய எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (30.04) நள்ளிரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் CEYPETCO எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தது.

பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றர் 7 ரூபாவினாலும், பெற்றோல் 95 ஒக்டேன் லீற்றர் 10 ரூபாவினாலும், டீசல் லீற்றர் 15 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 135 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 333 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும், பெற்றோல் 95 ஒக்டேன் லீற்றரின் புதிய விலை 365 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 310 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள.

மண்ணெண்ணெய் மற்றும் இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் இல்லை எனவும், இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 295 ரூபாவுக்கும், இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply