நாட்டின் பல பகுதிகளில் இன்று (01.05) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. மேல் பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.