தனது மனைவியை அதிகளவிலான இன்சுலின் மருந்தை வழங்கி கொலை செய்ய முயன்ற 33 வயதான வைத்தியர் நேற்று(30.04) கொழும்பு 05, லயர்ட்ஸ் வீதியில் வைத்து பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் (கலுபோவில வைத்தியசாலை) சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் தொடர்பில் வைத்தியசாலை வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்ட நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது மனைவிக்கு வற்புறுத்தி விருப்பத்துக்கு மாறாக அதிக இன்சுலின் ஏற்றியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் அவ்வாறு ஏற்றப்பட்ட இன்சுலின் சிரிஞ் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.