நுரைச்சோலை தலுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (30.04) கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் கைத்தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணமா என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.