கொழும்பு துறைமுகத்தின் 06 ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு அதிகாரியினால் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ப்ளூமண்டல் தோட்டப் பகுதியில் வசிக்கும் குழுவினர் மற்றும் மூன்று பெண்களும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் 06 ஆவது வாயிலுக்கு அருகில் உள்ள துறைமுகத்தில் இரும்பு திருட வந்த இருவரை விசாரணை செய்ய கிராம மக்கள் குழுவொன்று அங்கு வந்த போது அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருவர் தனியார் பாதுகாப்புப் பிரிவினரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கச் சென்ற போது, மற்றுமொரு அதிகாரியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.