எதிர்வரும் காலங்களில் எரிவாயுவின் விலை மேலும் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் நேற்று (01.05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கோட்டா முறையில் எரிபொருளை வெளியிடுவதை மாற்றியமைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 70 வீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 35 வீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இந்த வருடத்தில் அது மேலும் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “QR குறியீடு மூலம் எரிபொருள் வழங்கினாலும், பொருளாதாரம் வலுவாக இருக்கும்போது, சிறிது காலத்திற்குப் பிறகு அதனை இல்லாமல் செய்வதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் திட்டத்தை உருவாக்க முடிந்தது, மேலும் சுற்றுலா துறை வலுவடைந்தது இந்த நடவடிக்கைகளால் நமது நாட்டின் பொருளாதாரம் நிலை பெற்றது எனவும் பல போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளதால் அதிக சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் வருகின்றனர், மேலும் ரூபாயின் மதிப்பு வலுப்பெற ஆரம்பித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பொருட்களின் விலையும் குறைந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் எரிவாயு விலை மீண்டும் குறையும் என நம்புவதாகவும் என அவர் தெரிவித்துள்ளார்.