இந்திய டெஸ்ட் அணி டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளின் தரப்படுத்தல்களில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்ட வருடாந்த தரப்படுத்தல் மேம்படுத்தல் முடிவுகளின் படி இந்த முதலிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் முதலிடத்தை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இழந்து மூன்றாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. டெஸ்ட் தரப்படுத்தலில் அவுஸ்திரேலிய அணியை பின் தள்ளியே இந்த முதலிட வாய்ப்ப்பை இந்தியா அணி பெற்றுக் கொண்டது.
மூன்று வித தரப்படுத்தல்களிலும் முதலிடத்தை பெறும் வாய்ப்பினை இந்தியா இழந்துள்ளது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் முதல் மூன்று அணிகளும் 113 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். தரப்படுத்தல் புள்ளிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து அணிகள் முதலிரு இடங்களை பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை பெறும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டிருந்தது. மீண்டும் தற்போது இந்த வாய்ப்பே இழந்துள்ளது.
இலங்கை அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும், T20 போட்டிகளிலும் எட்டாமிடத்தை பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஏழாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
டெஸ்ட் தரப்படுத்தல்
(அணி, புதிய புள்ளிகள், பழைய புள்ளிகள், புள்ளி மாற்றம், புதிய இடம், முந்தைய இடம், மாற்றம்)
இந்தியா | 119 | 121 | 2 | 2 | 1 | 1 | |
அவுஸ்திரேலியா | 122 | 116 | -6 | 1 | 2 | -1 | |
இங்கிலாந்து | 106 | 114 | 8 | 3 | 3 | 0 | |
தென் ஆபிரிக்கா | 104 | 104 | 0 | 4 | 4 | 0 | |
நியூசிலாந்து | 103 | 100 | -3 | 5 | 5 | 0 | |
பாகிஸ்தான் | 88 | 86 | -2 | 6 | 6 | 0 | |
இலங்கை | 85 | 84 | -1 | 7 | 7 | 0 | |
மேற்கிந்திய தீவுகள் | 76 | 76 | 0 | 8 | 8 | 0 | |
பங்களாதேஷ் | 47 | 45 | -2 | 9 | 9 | 0 | |
சிம்பாவே | 27 | 32 | 5 | 10 | 10 | 0 |
ஒரு நாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தல்
(அணி, புள்ளிகள், தரப்படுத்தல்)
அவுஸ்திரேலியா | 35 | 3965 | 113 |
நியூசிலாந்து | 31 | 3504 | 113 |
இந்தியா | 47 | 5294 | 113 |
இங்கிலாந்து | 36 | 3988 | 111 |
பாகிஸ்தான் | 25 | 2649 | 101 |
தென் ஆபிரிக்கா | 31 | 3141 | 95 |
பங்களாதேஷ் | 38 | 3625 | 86 |
இலங்கை | 36 | 3099 | 72 |
மேற்கிந்திய தீவுகள் | 43 | 3105 | 71 |
ஆப்கானிஸ்தான் | 20 | 1419 | 45 |
அயர்லாந்து | 27 | 1384 | 51 |
T20 தரப்படுத்தல்
(அணி, புதிய புள்ளிகள், பழைய புள்ளிகள், புள்ளி மாற்றம், புதிய இடம், முந்தைய இடம், மாற்றம்)
இந்தியா | 267 | 267 | 0 | 1 | 1 | |
இங்கிலாந்து | 261 | 259 | -2 | 2 | 2 | |
நியூசிலாந்து | 253 | 256 | 3 | 5 | 3 | |
பாகிஸ்தான் | 255 | 254 | -1 | 3 | 4 | |
தென் ஆபிரிக்கா | 254 | 253 | -1 | 4 | 5 | |
அவுஸ்திரேலியா | 251 | 248 | -3 | 6 | 6 | |
மேற்கிந்திய தீவுகள் | 238 | 238 | 0 | 7 | 7 | |
இலங்கை | 236 | 237 | 1 | 8 | 8 | |
பங்களாதேஷ் | 226 | 222 | -4 | 9 | 9 | |
ஆப்கானிஸ்தான் | 220 | 219 | -1 | 10 | 10 | |
சிம்பாவே | 196 | 197 | 1 | 11 | 11 | |
அயர்லாந்து | 191 | 194 | 3 | 12 | 12 | |
நம்பிபியா | 183 | 190 | 7 | 14 | 13 |