உகாண்டாவில் அமைச்சர் ஒருவர் இன்று (02.05) அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உகண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள அமைச்சர் எங்கோலாவின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அரசாங்கத்தில், தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறைக்கு பொறுப்பான அமைச்சராக பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற கர்னல் சார்லஸ் எங்கோலாவுக்கும் அவரது மெய்க்காப்பாளருக்கும் இடையில் ஊதியம் தொடர்பில் சிக்கல் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அமைச்சரிடம் பணிபுரிந்த போதிலும் தனக்கு நீண்ட நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என மெய்ப்பாதுகாவலர் கூச்சலிட்டதற்கான சாட்சிகள் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.