மலேசியா அக்ஷியாட்டா குழு பெர்ஹாட் நிறுவனத்தின் இலங்கையின் நிறுவனமான டயலொக் அக்ஷியாட்டா நிறுவனம் மற்றும் பாரதி எயார்டெல் லங்கா நிறுவனம் ஆகியன இலங்கையில் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டங்கள் மூலமாக எயார்டெலின் பங்குகள் டயலாக் வசமாகவுள்ளன. அத்தோடு டயலொக் தமது பங்குகளை எயார்டெல் நிறுவனத்துக்கும் வழங்கவுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இரு நிறுவனங்களும் பங்குகளை பரிமாற்றிக் கொள்ளவுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக பங்கு பரிவர்த்தனை அதிகாரிகளுடனும், உரிய சட்ட திட்டங்கள் தொடர்பிலும் இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. பொருத்தமான, உரிய ஒப்பந்தங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பின்னர் இந்த கூட்டிணைவு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.